Connect with us

India

வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்த தமிழர்! உள்ளூரில் வசித்த தாய் வீட்டை சிசிடிவி காட்சி மூலம் பார்த்த போது ஏற்பட்ட அ-தி-ர்-ச்-சி

சென்னையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் திருடன் புகுந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சிசிடிவி கமெரா மூலம் அதை பார்த்த உரிமையாளர் திருடனை பொலிசில் சிக்க வைத்துள்ளார்.

போரூரில் தனியாக வசித்து வருபவர் சண்முக சுந்தரவள்ளி (67). இவரது மகன் அருள்முருகன், அயர்லாந்தில் குடும்பத்துடன் வசித்து வசிக்கிறார்.

இந்நிலையில், மூதாட்டி நேற்று அண்ணா நகரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

அருள்முருகன், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தாய் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனது செல்போனில் பார்த்த போது வீட்டிற்குள் வேறு ஆள் நடமாட்டம் இருப்பதை கண்டு அ-தி-ர்-ச்-சி அ–டைந்-தா-ர்.

உடனே இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் அளிக்க, அங்கு விரைந்த காவல்துறையினர் லேப்டாப்புடன் சுவர் ஏறி வெளியே குதித்த செங்கல்பட்டைச் சேர்ந்த சைக்கோ முரளி என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், சில தினங்களுக்கு முன், கூடுவாஞ்சேரியில் வாசலில் கோலம் போடாத வீடுகளைத் தேடிப்பிடித்து‌, உள்ளே நுழைந்து கொள்ளையடித்து, காவல்துறையிடம் பிடிபட்டது தெரியவந்தது. மேலும், இதுவரை கொள்ளையடித்த 4 இடங்களிலும் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டதாகவும் கொள்ளை அடித்து நான் ஒன்றும் அனுபவிக்கவில்லை எனவும் அதற்குள்ளேயே பொலிசில் சிக்கிக் கொள்கிறேன் எனவும் சைக்கோ முரளி பொலிசில் புலம்பியுள்ளார்.

Don't Miss

கர்நாடக மாநிலத்தில் பிரசவத்திற்காக காரில் புறப்பட்ட கர்ப்பிணியும் அவரது உறவினர்களும் கோர விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கலபுரஹு மாவட்டம் அலண்ட் நகரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான இஃப்ரானா பேஹம் , அவரது உறவினர்களான ரூபியா பேஹம் , ஜெயஹுன்பி, முனீர், முகமது அலி, சௌகித் அலி என மொத்தம் 7 பேர் இச்சம்பவத்திற்கு பலியாகியுள்ளார். இஃப்ரானா பேஹமிற்கு இன்று காலை திடீரென பிரசவவலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் கார் மூலம் கலபுரஹாவில் உள்ள மருத்துவமனையை நோக்கி வேகமான சென்று கொண்டிருந்தபோது சவலஹு என்ற கிராமம் அருகே உள்ள சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் பயங்கர வேகத்தில் மோதியதுயுள்ளது. மோதிய வேகத்தில் காரும், லாரியும் சாலையை விட்டு விலகி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் கர்ப்பிணியான இஃப்ரானா பேஹம் உள்பட 7 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *