Connect with us

India

ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினைக்கு நல்ல பலனை பெற வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதும்..!

இன்று பரவலாக இருக்கும் நோய்களில் ஒன்று ஆஸ்த்துமா, குழந்தைகள், வாயதானபர்கள், இளைஞர்கள் என பலரையும் தாக்குகின்றது. இதற்கான முதல் காரணம் சூழல் மாசடைவது தான். தூய்மை இல்லாத காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் விளைவே இந்த ஆஸ்துமா, சிலர் இதனை விலை கொடுத்து வாங்கி தங்கள் உறவினர் நண்பர்களுக்கும் கொடுத்து அவர்களையும் அவஸ்த்தை பட வைத்து விடுகின்றனர்.

அட ஆமாங்க இது தான் ஆஸ்துமாவை அதிகம் பரப்புகின்றது என்றும் சொல்லலாம். எவ்வளவு சொன்னாலும் அவர்களும் புகைத்தலுக்கு அடிமையாகி அருகில் இருப்பவரையும் மரணம் வரை கொண்டு சென்று விடுகின்றனர். இன்று வெளி நாடுகளாக இருக்கட்டும் உள் நாடாக இருக்கட்டும் பலரும் இந்த ஆஸ்துமாவிற்கு அடிமை என்றே சொல்ல வேண்டும். அதனால் இன்று அவஸ்தை படுத்தும் ஆஸ்துமாவை எப்படி அடித்து திரத்துவது என பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய், ஓமம்,கற்பூரம்,இது மூன்றும் போதும் இதனை இலகுவாக நிமிடத்தில் தயார் செய்யலாம்.முதலில் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணையை ஊற்றி அதனுடன் ஓமம் போடுங்கள்.

அத்துடன் கற்பூரத்தை போட்டு நன்றாக சூடு பண்ணுங்கள். கற்பூரம் நன்றாக கரைந்த பின் இறக்கி ஆற வையுங்கள் ஆறிய பின் இரவில் உடல் முழுவதும் பூசவும் காலையில் எழுந்து குளித்து விடுங்கள் இப்படி ஒரு வாரம் செய்து வர ஆஸ்துமா நீங்கிவிடும்.

நுரையீரல் சுத்தம் செய்ய

இதை செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். சுத்தம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஓய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.

முதல் நாள்: இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.

ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப் (புரூட் சாறு) குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் கிரேப்புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக இருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.

மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.

இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமில்லாமல் குடிக்கலாம். இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றவும். அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.

இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.

மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல முறையில் பலனை பெறலாம்.

தினமும் ஆரோக்கிய குறிப்புகளை
பெற தமிழ் டாக்டர் Appயை
கூகிள் Play Store இப்போதே
Download செய்யுங்கள்👇

Tamil Doctor app
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

Trending