Connect with us

India

தயிருடன் இந்த ஓர் பொருளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தெரியுமா?

சாப்பாடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம், வேண்டாம் என கூறும் அளவிற்கு சாப்பாட்டு பிரியர்கள் இங்கு அதிகம். ஆனால், இதில் சில சிக்கல்களும் உண்டு. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு உடல் எடை கூடிவிடும் அபாயம் இதனால் ஏற்படும். இது போன்ற பாதிப்பில் இருந்து நம்மை காப்பாற்ற உடற்பயிற்சி, குறைந்த அளவிலான உணவுகள், பழங்கள் போன்றவற்றை நாம் மேற்கொள்ளலாம்.

காலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் தெரியுமா?

என்னதான் இருந்தாலும் இவை அந்த அளவிற்கு சரியான தீர்வை தருவதில்லை. ஆனால், இதற்கு ஒரு எளிய வழி உள்ளது என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் வெறும் மாதுளை மற்றும் தயிரை வைத்து நம்மால் உடல் எடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

வெறும் 1 மாதம் தொடர்ந்து காலையில் தயிர் மற்றும் மாதுளையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் 5 கிலோ முதல் 10 கிலோ வரை உங்களால் எடையை குறைக்க முடியும். கூடவே மேலும் சில உடலில் இருக்க கூடிய பிரச்சினைகளையும் இது தீர்க்கும்.

அருமருந்து
தயிர் சாதத்தில் மாதுளையை சேர்த்து நாம் சாப்பிடுவோம். அதே போன்று சில உணவுகளை அழகுபடுத்த மாதுளையை பயன்படுத்துவோம். ஆனால்,உண்மையிலே மாதுளையை சரியாக பயன்படுத்த கூடிய முறை ஒன்றுள்ளது. அதுவும் தயிருடன் சேர்த்து சாப்பிடுவதால் இதன் தன்மை பல மடங்காக அதிகரிக்குமாம்.

செரிமான பிரச்சினை
ஒருவருக்கு உடல் உறுப்புகள் சரியாக வேலை செய்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள செரிமான மண்டலத்தின் செயல்திறன் போதும். செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகினால் நிச்சயம் உங்களின் முழு உடலையும் பாதித்து விடும்.

அவ்வாறு இருக்க, தினமும் காலை உணவாக மாதுளையுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினையே உங்களுக்கு ஏற்படாதாம்.

கொலஸ்ட்ரால்
இத்தனை நாட்களாக என்னென்னவோ உணவுகளை சாப்பிட்டு விட்டு உடலில் நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்திருக்கும். இனி இந்த பிரச்சினையை தீர்க்க தயிர் மற்றும் மாதுளை உள்ளது.

இவற்றை கலந்து சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். மேலும், இதயத்தின் இரத்த ஓட்டமும் எந்தவித தடையில்லாமல் நடைபெறும்.

புற்றுநோய் அபாயம்
ஆண்களின் அந்தரங்க உறுப்பில் ஏற்பட கூடிய புற்றுநோயை தடுக்கும் சக்தி மாதுளைக்கு உள்ளது. இதனை தயிருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கலாம். கூடவே பெருங்குடல் மற்றும் நுரையீரலில் ஏற்பட கூடிய பாதிப்பையும் இது தடுக்கும்.

எதிர்ப்பு சக்தி
மாதுளை மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி விரைவாக கூடும். இதனால் உடலில் உள்ள பாக்டீரியா, கிருமிகள் போன்றவற்றை எளிதில் போக்கி விடலாம். அத்துடன் உடலை சுத்தமாக வைக்கவும் இந்த இரண்டும் உதவுகிறது.

உடல் எடை
மாதுளையை தயிரில் கலந்து சாப்பிடுவதால் உடல் எடையை 1 மாதத்தில் குறைத்து விடலாம். ஆனால், இதனை தவறாமல் சாப்பிட்டு வருவது மிக முக்கியம். இதனை தயாரிப்பது எப்படி என்பதை இனி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • தயிர் அரை கப்
  • மாதுளை 1
  • ஓட்ஸ்

தயாரிப்பு முறை
முதலில் மாதுளையை உரித்து கொண்டு இவற்றுடன் தயிரை சேர்த்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு கலந்து கொண்டு, தேவைக்கு ஓட்ஸை வேக வைத்து இவற்றுடன் சேர்த்து கொள்ளலாம்.

இந்த உணவை தினமும் காலையில் சப்பிட்டு வந்தால் உடல் எடை, கொலஸ்ட்ரால், தொப்பை போன்ற எல்லா பிரச்சினைகளும் தீர்வுக்கு வந்து விடும்.

முடி உதிர்வு
மாதுளை மற்றும் தயிரை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக முடியின் வளர்ச்சியை நம்மால் அதிகரிக்க இயலும். கூடவே முடி கொட்டும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். மேலும், முடியின் அடர்த்தியையும் இவை அதிகரிக்கும்.

பொலிவான சருமம்
முகம் பொலிவாக இருக்க மிக சுலபமான வழி உள்ளது. மாதுளையை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதால் நீங்கள் அமுல் பேபியை போன்று மாறிவிடுவீர்கள். மாதுளையின் தோலை காயவைத்து பொடியாக அரைத்து அவற்றுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சரும பாதிப்புகள் முற்றிலுமாக குறையும்.

தினமும் ஆரோக்கிய குறிப்புகளை
பெற தமிழ் டாக்டர் Appயை
கூகிள் Play Store இப்போதே
Download செய்யுங்கள்👇

Tamil Doctor app
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

Trending